​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை

Published : Oct 11, 2019 4:05 PM

கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை

Oct 11, 2019 4:05 PM

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே லாரிகளில் கொண்டு வந்துக் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளிபாளையம் அடுத்துள்ள தேவனம்பாளையத்தில் கடந்த சில தினங்களாகவே அடையாளம் தெரியாத லாரிகள் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் நள்ளிரவில் வந்த கேரள லாரிகள் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மலைப்போல் கொட்டிவிட்டுச் சென்றுள்ளன.

அந்த மருத்துவ கழிவு மூட்டைகளில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வெளியேறி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கவலை தெரிவிக்கும் அப்பகுதியினர், மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.