​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திக் கொண்ட பெண்

Published : Oct 11, 2019 3:56 PM

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திக் கொண்ட பெண்

Oct 11, 2019 3:56 PM

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் பெண், தன் தந்தை மீது அளவில்லா அன்பு வைத்திருந்தார். தந்தையின் செல்லப் பிள்ளையான அவர், 2013-ம் ஆண்டு கல்லீரல் புற்றுநோய்க்கு தந்தையை இழந்தார். தன் தந்தையோடு அதிக நேரம் செலவிட்டிருப்பதாகவும், சுற்றுப் பயணங்கள், மீன்பிடித்தல் என பல எண்ணிலடங்கா நினைவுகளை சுமந்து வாழ்வதாகவும் யுவெட்டே கூறுகிறார்.

தன்னம்பிக்கையோடு தைரியமாக வாழ்வது எப்படி என்பதை தந்தை தனக்கு கற்றுத் தந்ததாகக் கூறிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் அவரது குரலை தான் மறந்துவிடுவோமோ என்ற அச்சம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். குரல் பதிவை பச்சைக் குத்திக் கொள்ளலாம் என இன்ஸ்டாகிராமில் கண்டதாகவும், அதேபோல் தன் தந்தை தன்னுடைய குழந்தைகளுக்கு இறுதியாக அனுப்பிய குரல் பதிவை பச்சை குத்திக் கொண்டதாகவும் கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் 2017-ம் ஆண்டு குரல் பதிவு வடிவத்தை பச்சையாகக் குத்தி, ஸ்கின் மோசன் என்ற ஆப்-ஐ கண்டறிந்து, அதன் மூலம் பச்சை குத்தப்பட்ட இடத்தை ஸ்கேன் செய்தால், ஒலிக்கும் வகையில் கண்டறிந்தார். தந்தை குரல் பதிவை பச்சை குத்திக் கொள்ள இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாயும், அந்த அப்ளிகேசனுக்காக 2 ஆயிரத்து 800 ரூபாயும் யுவெட்டெ செலவழித்துள்ளார்.