​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

Published : Oct 11, 2019 2:38 PM

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

Oct 11, 2019 2:38 PM

மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும், அதற்கான அவசியம் இருந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியபிறகு, சீட்டு நிறுவன மோசடி தொடர்பான விசாரணை தாமதமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ரயில்வே தனியார்மயமாக்கல் தொடர்பான நடவடிக்கையால் நாடு முழுமைக்கும் ரயில்வே ஊழியர்கள் இடையே பணி பாதுகாப்பில்லாத உணர்வு நிலவுகிறது என்று குறிப்பிட்ட அவர், வசதிபடைத்தவர்கள் பயணிக்கும் ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்றும், பாமர மக்கள் பயணிக்கும் ரயில்களை தனியார்வசம் ஒப்படைக்க கூடாதென்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால்தான், ரயில்வேயை தனியார்மயமாக்க ஆர்வம் செலுத்துவதாகவும், தனியார்மயமாக்கலால் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் பிரச்னையை சீன அதிபர் எழுப்பினால், பதிலுக்கு உஹிகுர் முஸ்லிம் மக்கள் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்றார் அவர்.