​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமல்லபுரத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆய்வு

Published : Oct 10, 2019 8:58 PM

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆய்வு

Oct 10, 2019 8:58 PM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு சென்னையிலும், மாமல்லபுரத்திலும் செய்யப்பட்டுள்ள சிறப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை விமான நிலையம் முதல் சீன அதிபர் தங்கும் கிண்டி ஐ.டி.சி. சோழா ஹோட்டல் வரை உள்ள பகுதி, கிண்டி முதல் ஓஎம்ஆர், இசிஆர் வரையில் சீன அதிபரை வரவேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வளைவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஹோட்டலில் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். பின்னர் மாமல்லபுரத்திலுள்ள அர்ஜுனன் தபசு, 5 ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டனர்.