​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு

Published : Oct 10, 2019 4:47 PM



தஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு

Oct 10, 2019 4:47 PM

தஞ்சை கலைகூடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியார் அக்கோயிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிவன் சிலைகளை வழங்கினார். அந்த 2 சிலைகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் மாயமாகின.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், 2 சிலைகளும் கலைக்கூடத்தில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் கலைக்கூடத்துக்கு வந்து, கடந்த 5ம் தேதி சிலைகளை மீட்டனர்.

பின்னர் கும்பகோணத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2 சிலைகளையும் போலீஸார் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 சிலைகளையும் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக சிறுமேனிகள் (சிலைகள்) பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 சிலைகளும் அந்த மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.