​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Published : Oct 09, 2019 2:24 PM

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Oct 09, 2019 2:24 PM

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும் என்று அவர் கூறினார்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு தர வேண்டும் என்றும்,  பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக வணிகத் தொடர்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்து  சென்றதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.