​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புரத சத்திற்காக சிக்கன் சாப்பிடுமாறு தமது மகள் கூறியது சரிதான்.. ஆர்.எஸ்.எஸ் விழாவில் ஷிவ் நாடார் பேச்சு

Published : Oct 09, 2019 11:41 AM



புரத சத்திற்காக சிக்கன் சாப்பிடுமாறு தமது மகள் கூறியது சரிதான்.. ஆர்.எஸ்.எஸ் விழாவில் ஷிவ் நாடார் பேச்சு

Oct 09, 2019 11:41 AM

உத்திரப்பிரதேசத்தில், ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க, தமது மகள் செய்த செயல், தன்னளவில் சரிதான் என்றாலும், அது தங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற, HCL நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்திருக்கிறார்.

மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நாட்டின் வளர்ச்சியை, அதன் மேம்பாட்டை, அரசால் மட்டுமே, அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது என்றும், அதற்கு, தனியார் நிறுவனங்கள், குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புகள் அவசியம் என்றும் ஷிவ் நாடார் தெரிவித்திருக்கிறார்.

தங்களது HCL குழுமத்தின் ஓர் அங்கமான சிக்சா தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்த ஷிவ் நாடார், தங்களது, சிக்சா குழுவினர், உத்திரப்பிரதேசத்தில், 5 வயதுக்கும் குறைவான 46 விழுக்காடு குழந்தைகள், தீவிரமான ஊட்டச்சத்து குறைப்பாட்டால், பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

தங்களது சிக்சா அமைப்பில், தமது மகள் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றி வருவதாக தெரிவித்த ஷிவ் நாடார், ஊட்டச்சத்து குறைப்பாட்டல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், புரத சத்தினை பெறுவதற்காக, கட்டாயம் கோழிக்கறி உண்ண வேண்டும் என கூறியதாகவும், ஆனால், அது ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கூறியிருக்கிறார்.