​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடற்கரையோரம் 1500 கி.மீ.க்கு பரவி உள்ள எண்ணெய் படலம்

Published : Oct 08, 2019 4:00 PM

கடற்கரையோரம் 1500 கி.மீ.க்கு பரவி உள்ள எண்ணெய் படலம்

Oct 08, 2019 4:00 PM

பிரேசில் கடற்கரையோரம் சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒதுங்கியுள்ள எண்ணெய் கசடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களை ஒட்டிய கடலில் கடந்த 2 ஆம் தேதி முதல் திடீரென எண்ணெய் படலங்கள் மிதக்க தொடங்கின. நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் கடற்கரையோரங்கள் இதனால் மாசடைந்துள்ளதாகவும் கடற் உயிரினங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரையோரம் எண்ணெய் கசடுகளை ஒதுக்கி அதை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் எங்கிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.