​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
’’லட்சாதிபதி பிச்சைக்காரர்’’ ரயில் மோதி உயிரிழப்பு

Published : Oct 07, 2019 2:54 PM

’’லட்சாதிபதி பிச்சைக்காரர்’’ ரயில் மோதி உயிரிழப்பு

Oct 07, 2019 2:54 PM

மும்பையில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவர், சுமார் ஒன்னே முக்கால் லட்ச ரூபாய் மதிப்புள்ள சில்லறை காசுகளை தனது மூட்டை முடிச்சுகளில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பிர்பிசந்த் ஆசாத் என்ற பிச்சைக்காரர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை கோவந்தி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த குடிசைப் பகுதிக்கு சென்று ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சில மூட்டை முடிச்சுகள் தென்படவே அவற்றை அவிழ்த்து பார்த்த போலீசார், அவற்றில் ஏராளமான சில்லறைக் காசுகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

இதையடுத்து சுமார் எட்டு மணி நேரம் செலவழித்து அந்த சில்லறைகளை எண்ணி முடித்த போலீசார், சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் அதில் இருந்ததைக் கண்டறிந்தனர்.

அதுமட்டுமல்லாமல் சுமார் எட்டரை லட்ச ரூபாய் அளவுக்கு வங்கியில் அவர் வைப்பு நிதி வைத்திருக்கும் தகவல் அடங்கிய ரசீதும் கண்டெடுக்கப்பட்டது.

அவர் வைத்திருந்த ஆதார் கார்டு, பான் கார்டு, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை சோதனையிட்டதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் சில ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜஸ்தான் சென்று அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளவுள்ளனர்.