​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்

Published : Oct 07, 2019 2:41 PM



திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்

Oct 07, 2019 2:41 PM

சென்னை திருவொற்றியூரிலுள்ள தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு வந்த தமிழிசைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், வடிவுடையம்மன், அதிபுரீஸ்வரர் சன்னதிகளில் தமிழிசை தரிசனம் செய்தார். அப்போது, அங்கிருந்த பக்தர்களுக்கு கைகொடுத்த தமிழிசை, அவர்களிடம் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, திருவொற்றியூர் - எண்ணூர் விரைவு சாலையில் உள்ள பட்டினத்தார் கோயிலுக்குச் சென்ற தமிழிசை அங்கும் தரிசனம் செய்தார்.