​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

Published : Oct 06, 2019 5:14 PM



திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

Oct 06, 2019 5:14 PM

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவரிசையில் திருமணமான முதல் வருட துர்கா பூஜையை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தனது கணவர் நிகல் ஜெயினுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது, குடும்பத்தினர் சூழ கணவர் நிகில் ட்ரம் வாசிக்க, நஸ்ரத் அழகாக நடனமாடி அசத்தினார்.

அதனை தொடர்ந்து, கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் வாசித்து அசத்திய நுஸ்ரத் ஜஹானின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துர்கா பூஜையையொட்டி கடந்த மாதம் நுஸ்ரத் ஜஹான், மிமி சக்கரபர்த்தி இணைந்து ஆடிய பரத நாட்டியம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, துர்கா பூஜையையொட்டி கொல்கத்தா பாலகோட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரங்கில், வான் வெளி தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விமானி அபிநந்தனின் உருவப்பொம்மையை இடம்பெறச் செய்து சிறப்பித்துள்ளனர்.