​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவராத்திரி விழாவினை முன்னிட்டு தங்க கவசத்தால் அம்மனுக்கு அலங்காரம்

Published : Oct 06, 2019 5:05 PM

நவராத்திரி விழாவினை முன்னிட்டு தங்க கவசத்தால் அம்மனுக்கு அலங்காரம்

Oct 06, 2019 5:05 PM

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில்,கருவறை முழுவதும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்கரித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

ஆண்டுந்தோறும் நவராத்திரி விழா நாட்களில் இக்கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்கம், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். பணம் மற்றும் நகை வைத்து வழிபடுவதும் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் தொழில் விருத்தியடையும் என பக்தர்கள் நம்புவதால், இந்த பூஜைக்கு பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து பணம் அளித்து அம்மனை வழிபடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இக்கோவிலில் உள்ள அம்மனை தங்கத்தால் அலங்கரித்தும், கருவறை முழுவதும் 5,10, 20, 50, 100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1, 2, 5 ரூபாய் நாணயங்கள் கொண்டும் அலங்கரித்துள்ளனர்.

சுமார் 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 4 கிலோ தங்கத்தால் அம்மனை அலங்காரம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜை முடிந்ததும் பக்தர்கள் அளித்த பணம் மற்றும் நகை அவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டது.