​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை

Published : Oct 06, 2019 4:32 PM

2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை

Oct 06, 2019 4:32 PM

அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அமைந்துள்ள மத்திய அரசு தாக்கல் செய்யும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாக இது அமைகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் இது இரண்டாவது நிதிநிலை அறிக்கை ஆகும்.

இந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பொருளாதார விவகாரங்கள் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் முதல் வாரம் வரையில், சந்திப்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவு மற்றும் வருவாய் வசூலில் உள்ள சிக்கல்கள் குறித்த தேவையான விவரங்களுடன் நிதி ஆலோசகர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான துணைத் திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள் தொடர்பான விவரங்களும் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பின்னர் அனைத்து துறை செயலர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் நிதி அமைச்சக செயலாளர் ஆலோசித்த பிறகு நிதி நிலை அறிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.