​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

Published : Oct 06, 2019 3:51 PM

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

Oct 06, 2019 3:51 PM

சென்னையை அடுத்த மணலியில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.

அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் 10 நாட்கள் பிரமோற்சவத்தின் 3 ஆவது நாள் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அய்யா வைகுண்டர் தர்மபதியை தரிசனம் செய்த தமிழிசை மற்றும் அவரது கணவர் சவுந்தரராஜன் பரிவட்டம் கட்டி கவுரவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை தமிழிசை சவுந்திரராஜன் திறந்து வைத்தார்.