​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Published : Oct 04, 2019 6:22 PM

மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Oct 04, 2019 6:22 PM

மாமல்லபுரத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, உளவு பிரிவு ஐஜி, மாநகர காவல் ஆணையர், விமானப்படை, கடற்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலிலும், பிரதமர் மோடி கோவளம் அருகே உள்ள தனியார் ஹோட்டலிலும் தங்குவதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் 11,12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாமல்லபுரம் பகுதி கடற்கரை பகுதியாக இருப்பதால் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க விமானபடை, கடற்படை மூலமாக கண்காணிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.