​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் பட்னாவிஸ்

Published : Oct 04, 2019 4:51 PM

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் பட்னாவிஸ்

Oct 04, 2019 4:51 PM

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இம்மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைவர்களுள் ஒருவரும், மகாராஷ்டிர முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.

இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதி எம்.பியுமான நிதின் கட்கரியின் இல்லத்துக்கு தனது மனைவி அம்ருதாவுடன் சென்ற பட்னாவிஸ், அவரது பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

தொடர்ந்து நிதின் கட்கரியுடன் இணைந்து ஊர்வலமாக வந்த அவர், வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஊர்வலத்தில் பாஜகவின் மகாராஷ்டிர மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் உடன் வந்தார். ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் திறண்டு நின்று பாஜகவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். ஊர்வலத்தின் இடையே நிதின் கட்கரி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.