​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக வேட்பாளர் சுமார் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் - அமைச்சர் தங்கமணி

Published : Oct 04, 2019 3:55 PM

அதிமுக வேட்பாளர் சுமார் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் - அமைச்சர் தங்கமணி

Oct 04, 2019 3:55 PM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், சரோஜா, ஓ.எஸ்.மணியன், ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, இந்த தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்றும், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் காங்கிரஸ் பணபலம் படைத்த வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளதாகவும், அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.