​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து

Published : Oct 04, 2019 7:25 AM

மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து

Oct 04, 2019 7:25 AM

மேற்கு வங்க மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மால்டா மாவட்டம் ஜகநாத்பூர் என்ற இடத்தில் இருந்து பீஹார் மாநிலம் முகுந்தப்பூர் என்ற இடத்துக்கு மஹானந்தா ஆற்றில் பயணிகளுடன் தனியார் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அந்தப் படகு திடீரெனக் கவிழ்ந்தது. தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் தண்ணீரில் தத்தளித்த 28 பயணிகளை மீட்டனர். இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. எனினும் படகில் எத்தனை பேர் பயணம் மேற்கொண்டனர் என்ற சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.