​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரயிலில் பாலியல் கொடுமையிலிருந்து பெண்ணை மீட்ட காவலருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

Published : Apr 29, 2018 12:50 PM



ஓடும் ரயிலில் பாலியல் கொடுமையிலிருந்து பெண்ணை மீட்ட காவலருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

Apr 29, 2018 12:50 PM

சென்னையில் ஓடும் ரயிலில், பாலியல் வன்கொடுமையிலிருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சிவாஜிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தீரர் விருது வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேளச்சேரியிலிருந்து, கடற்கரை நோக்கி, கடந்த 23ஆம் தேதி இரவு சென்ற பறக்கும் ரயிலில், பயணம் செய்த ஒரு பெண்ணை, வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சிவாஜி, சத்யராஜை கைது செய்து, அந்த பெண்ணை மீட்டார்.

இந்த சம்பவத்தில், துரிதமாக செயல்பட்ட சிவாஜியை, ரயில்வே ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், பாராட்டி, பரிசு வழங்கினார்.

image இந்த நிலையில் காவலர் சிவாஜிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். மேலும், காவலர் சிவாஜிக்கு தீரர் விருது அளிப்பதற்கு, பியூஷ் கோயல் ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.