​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிக்கெட் அகடாமியில் அனுமதி கிடைக்காததால் மகளை மகனாக மாற்றிய தந்தை

Published : Oct 03, 2019 6:19 PM

கிரிக்கெட் அகடாமியில் அனுமதி கிடைக்காததால் மகளை மகனாக மாற்றிய தந்தை

Oct 03, 2019 6:19 PM

இந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையான ஷஃபாலி வர்மா, தனது இளம் வயதில் சிறுவன் என்று கூறி கிரிக்கெட் பயிற்சி பெற்றதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சூரத்தில் நடந்த தென்னப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியடைவதற்கு பெரும்பங்காற்றியவர் 15 வயதான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா. இவர் 33 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.

இந்த நிலையில் தனது மகள் ஷஃபாலியை மகன் என்று கூறி கிரிக்கெட் அகடாமியில் சேர்த்ததாக அவரது தந்தை சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் அகாடமியும் பெண் என்ற காரணத்தால் ஷஃபாலிக்கு பயிற்சி அளிக்க மறுத்துவிட்டன என்று கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.

மனம் உடைந்து போன ஷஃபாலிக்கு ஆண்கள் போன்று தலைமுடி வெட்டிக்கொள்ள அறிவுறுத்தியதாகவும் பின்னர் மகன் என்று கூறி மகள் ஷஃபாலியை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்ததாகவும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

2013 ல் லஹ்லியில் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக விளையாடும்போது ஷாஃபாலிக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 10 ஆம் வகுப்பு படித்து வரும் இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி, இந்தியாவுக்காக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.