​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

Published : Oct 03, 2019 6:09 PM

12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

Oct 03, 2019 6:09 PM

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற  12 மற்றும் 13 ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 14 மற்றும் 15 ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மீண்டும் 16ம் தேதி நாங்குநேரியிலும், 18ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும் அவர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.