​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை மன்னித்த இளைஞர்

Published : Oct 03, 2019 5:28 PM

சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை மன்னித்த இளைஞர்

Oct 03, 2019 5:28 PM

அமெரிக்காவில் சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை கருப்பின இளைஞர் ஒருவர் மன்னித்து, நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் மாவட்டத்தில் வசித்து வந்த பெண் காவலர் ஆம்பர் கைகெர் என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, தனது வீட்டின் அருகே 4வது தளத்தில் வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

இந்த சம்பவத்தை கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் இதனை மறுத்த ஆம்பர் கைகெர், சம்பவம் நடந்த அன்றைய தினம் தனது வீட்டுக்குள் ஜீன் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து, தற்காப்புக்காக ஜீனை கொலை செய்ததாக கூறினார்.

இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதில் ஆம்பர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவருக்கு 5 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆம்பர் கைகருக்கு குறைந்தது 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஜீன் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு டல்லாஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி டாம்மி கெம்ப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளியான ஆம்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே ஜீன் குடும்பம் சார்பில் நீதிமன்றம் வந்தர அவரது இளைய சகோதரன், தனது சகோதரனை கொன்ற ஆம்பரை தான் மன்னித்து விட்டதாகவும், ஆம்பரை நீதிமன்றத்தில் வைத்து அரவணைத்து ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும் என கோரினார். இதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்ததை அடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆரத்தழுவிக்கொண்டனர்.image

நீதிமன்றத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம், ஜீனின் குடும்பத்தினரையும் கண்கலங்க வைத்தது. முன்னதாக ஆம்பரின் சிறை தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.