​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்ததாக புகார்

Published : Oct 03, 2019 4:34 PM

இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்ததாக புகார்

Oct 03, 2019 4:34 PM

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இயங்கி வரும் தனது ஒலிப்பதிவு அரங்கத்தை அத்துமீறி பயன்படுத்துவதாக பிரசாத் ஸ்டூடியோ இயக்குனர் உட்பட மூன்று பேர் மீது இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 40 ஆண்டுகளாக இசையமைப்பாளார் இளையராஜா இசை கோர்ப்பு, ஒலிப்பதிவு அரங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரசாத் ஸ்டூடியோ நிறுவனர் எல்.வி.பிரசாத், ஒலிப்பதிவு அரங்கு அமைக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ இயக்குனரும், எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய சாய் பிரசாத், அந்த ஒலிப்பதிவு அரங்கில் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளை செய்து வருவதாகவும், ஒலிப்பதிவு செய்யவிடாமல் இடையூறு செய்வதாகவும் இளையராஜா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்ததாக பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் சாய் பிரசாத், ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் மீது இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா குழுவில் உள்ள கலைஞர்கள் அரங்கத்தில் வைத்துள்ள கருவிகளும் இதனால் சேதமாக வாய்ப்புள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் வழக்கை விசாரித்து  வருகின்றனர்.