​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதார துறை மூலம் துரித நடவடிக்கை - ஆட்சியர் மகேஷ்வரி

Published : Oct 03, 2019 4:21 PM

போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதார துறை மூலம் துரித நடவடிக்கை - ஆட்சியர் மகேஷ்வரி

Oct 03, 2019 4:21 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதார துறை மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘போஷன் அபியான்’ எனப்படும் வீட்டுக்கு வீடு பழகு- ஊட்டச் சத்துணவு திட்டம் இந்த மாதம் கடைபிடிக்கப்பட்டது.

இத்திட்டத்தை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும்  இயக்கம் நடைபெற்றது.

வட்டார அளவில் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை சுய உதவிக்குழுக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாரை சந்தித்து வழங்கினர்.

இதில் அதிக கையெழுத்து பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர் மகேஷ்வரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறித்து சுமார் 2 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் காய்ச்சல் ஏற்பட்டதும்  தனி நபரை அணுகாமல் ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். 

மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதார துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறிய அவர், போலி மருத்துவர்களை கண்டுபிடித்தால் உடனடியாக 044 27664177 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் புகார் கூறவும் அறிவுறுத்தினார்.