​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை - நாளை வைகையாற்றில் இறங்குவதையொட்டி விரிவான ஏற்பாடு

Published : Apr 29, 2018 12:26 PM



மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை - நாளை வைகையாற்றில் இறங்குவதையொட்டி விரிவான ஏற்பாடு

Apr 29, 2018 12:26 PM

அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை, மதுரையில் பக்தர்கள் திரண்டு எதிர்சேவை செய்து வரவேற்கின்றனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அழகர் கோவிலில் இருந்து கள்ளர் வேடம் தரித்து அழகர் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். வரும் வழியில் ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று அருள் பாலித்தார். இன்று காலை மதுரை சுந்தராஜன்பட்டி, கடச்சனேந்தல் வந்த கள்ளழகருக்கு மண்டகப் படிகளில் நைவேத்தியங்கள், பட்டு பரிவட்டம் சார்த்தப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா முழக்கத்துடன் எதிர் சேவை செய்து அழகரை வரவேற்றனர்.

காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. தொடர்ந்து புதூர் வழியாக செல்லும் அழகர், தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இளைப்பாறுகிறார். நாளை காலை தங்கக் குதிரையில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.