​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை அருகே சட்டவிரோத பான்மசாலா ஆலை இயங்கிய விவகாரத்தில் 4 பேர் கைது

Published : Apr 29, 2018 12:21 PM



கோவை அருகே சட்டவிரோத பான்மசாலா ஆலை இயங்கிய விவகாரத்தில் 4 பேர் கைது

Apr 29, 2018 12:21 PM

கோவை மாவட்டம் சூலூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பான் மசாலா ஆலையில் 15 மணி நேரம் சோதனை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர்.

சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் தொழிற்சாலை ஒன்றில், பான்மசாலா தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற போலீசார் 15 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அங்கிருந்து 79கிலோ புகையிலை தூள் மற்றும் 3 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

image

இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநிலத்தை சேர்ந்த அஜய், சோஜிராம், ராம்தேவ் மற்றும் மேலாளர் ரகுராம் ஆகியோரை கைது செய்துள்ளனர். டெல்லியில் இருக்கும் ஆலையின் உரிமையாளர் அமீத் ஜெயினை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.