​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்தில் இருந்து 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பறிமுதல்

Published : Oct 01, 2019 5:05 PM

பேருந்தில் இருந்து 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பறிமுதல்

Oct 01, 2019 5:05 PM

ஜம்மு பேருந்து நிலையம் அருகே பேருந்து ஒன்றில் இருந்து 15 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருத்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவாரில் இருந்து ஜம்முவுக்கு வந்த பேருந்தில் ஆர்டிஎக்ஸ் வெடிமருத்து கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பிடித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிலாவாரியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆர்டிஎக்ஸ் உள்ள பார்சலை தந்ததாகவும் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாங்கி வந்ததாகவும் விசாரணையில் பேருந்து ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.