​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி - பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தியது

Published : Apr 29, 2018 11:12 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி - பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தியது

Apr 29, 2018 11:12 AM

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை- மும்பை அணிகள் மோதிய போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ராயுடு 56 ரன்களும், தோனி 26 ரன்களும் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ரெய்னா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்துஆடிய மும்பை அணி வீரர்களான யாதவ் 44 ரன்களும், லீவிஸ் 47 ரன்களும் எடுத்தனர். இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.