​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது

Published : Oct 01, 2019 4:34 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது

Oct 01, 2019 4:34 PM

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமான நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 737 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஒரு கட்டத்தில் 226 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.

அதிக கடன் சுமை குறித்த வதந்திகள், ஆட்டோமொபைல் துறையின் சரிவு ஆகியவற்றின் தாக்கத்தால், சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக எஸ் வங்கியின் (Yes Bank) பங்குகள், 22 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 305 புள்ளிகளாக முடிவடைந்தது. நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 359 புள்ளிகளாக நிறைவடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 20 காசுகள் வரை சரிந்து 71 ரூபாய் 6 காசுகளாக உள்ளது. இதனிடையே ஆபரணத்தங்கத்தின் விலையும் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.

அதன் படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 28 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 32 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 556 ரூபாய்க்கு விற்பனையாகிறது.