​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

Published : Oct 01, 2019 4:31 PM

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

Oct 01, 2019 4:31 PM

தென்னாப்பிராக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படும் இந்திய அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தென்னாப்பிராக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில், விராட் கோலி கேப்டன், அஜின்கியா ரஹானே துணை கேப்டன், ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, விருத்திமன் சாஹா, இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ரிஷப் பந்துக்கு அளித்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தினார் எனவும் இருப்பினும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த சாஹாவுக்கு தற்போது காயம் சரியாக விட்டதாகவும் இது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டிய சரியான தருணம் எனவும் கூறினார்.

அதேபோல் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களுக்கு வேண்டும் என குறிப்பிட்ட கோலி, சுழற் பந்து வீச்சில் அஸ்வினுக்கு தான் முன்னுரிமை எனவும் கூறினார்.