​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அகதிகள் முகாமில் தீ விபத்து அடிப்படை வசதிகள் கேட்டு கலவரம்

Published : Oct 01, 2019 10:37 AM

அகதிகள் முகாமில் தீ விபத்து அடிப்படை வசதிகள் கேட்டு கலவரம்

Oct 01, 2019 10:37 AM

கிரீஸ் நாட்டில் அகதிகளின் முகாமில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாயும், குழந்தையும் உயிரிழந்தைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் கேட்டு அங்கு கலவரம் வெடித்துள்ளது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தினால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். அவர்களில் கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான லெபாஸ் தீவு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

13 பேர் இருக்கும் நிலையில் அங்கு, 3 ஆயிரம் பேருக்கான வசதிகள் மட்டுமே செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி தாயும், குழந்தையும் உயிரிழந்தனர்.

அப்போது தீயை அணைப்பதற்கோ, விசாரிப்பதற்கோ அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அகதிகள் வன்முறையில் இறங்கினர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.