​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - எம்.எஸ்.தோனி சந்திப்பு

Published : Sep 30, 2019 4:12 PM

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - எம்.எஸ்.தோனி சந்திப்பு

Sep 30, 2019 4:12 PM

ஜார்கண்ட் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தனது மனைவி சவிதா கோவிந்துடன் ஜார்கண்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை எம்.எஸ். தோனி சந்தித்து பேசியுள்ளார்.

தனது மனைவி சாக்சி மற்றும் மகள் ஷிவா ஆகியோரையும் இந்த சந்திப்பின்போது அவர் உடன் அழைத்துச்சென்றுள்ளார். சந்திப்பையடுத்து தோனி மற்றும் தோனியின் குடும்பத்திற்கு விருந்து உபசரிப்பும் நடைபெற்றுள்ளது. தோனி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறாமல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.