​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி..!

Published : Sep 30, 2019 4:04 PM

தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி..!

Sep 30, 2019 4:04 PM

தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்ற வளைகாப்பு திருவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு 280 பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளையும், 298 பேருக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து 228 மதிப்புள்ள தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் என்றார்.

மாணவ, மாணவிகள் 45 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், ஏனைய மாணவர்களுக்கு விரைவில் மடிகணினி வழங்கப்படும் என்றார்.

1,000 ஆங்கில வார்த்தைகள் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதை விரைவில் முதலமைச்சர் வெளியிட உள்ளார் என்றும் அவர் கூறினார். தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.