​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

Published : Sep 29, 2019 7:30 PM

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

Sep 29, 2019 7:30 PM

தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லை அடுத்த என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தில் நியாயவிலைக்கடை ஒன்றை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணிகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகளும் 2 ஆயிரம் பார்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.

மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்

பார்களுக்கான டெண்டர் திங்கட்கிழமை நடைபெறும் என்றும், அரசு மதுக்கடைகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.

விவசாயிகளுக்கு தட்கல் முறையில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டிற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் முழுவதும் மின் இணைப்பு கேட்டு மனுக் கொடுப்பவர்களும் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.