​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வதந்திகளால் வன்முறை வெறியாட்டம் - போலீசார் துப்பாக்கிச் சூடு

Published : Sep 28, 2019 8:55 AM

வதந்திகளால் வன்முறை வெறியாட்டம் - போலீசார் துப்பாக்கிச் சூடு

Sep 28, 2019 8:55 AM

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் பொலீரோ கார் ஒன்றில் வந்த சிலர் கிராமத்தில் குழந்தைகளை கடத்திச் செல்வதாக காட்டுத்தீ போல் பரவிய வதந்திகளால் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது.

அந்த காரை தலைகீழாகப் புரட்டிப் போட்ட கிராம மக்கள் தீ வைத்து கொளுத்தினர். காரில் வந்த இரண்டு பேரை புரட்டி புரட்டி அடித்து உதைத்தனர்.

வன்முறையைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதையடுத்து வன்முறையாளர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

படுகாயம் அடைந்த காரில் வந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்