​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளி பலி

Published : Sep 27, 2019 11:11 AM

மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளி பலி

Sep 27, 2019 11:11 AM

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்திலுள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதய நோய்கள் சம்பந்தமான பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்த மேலும் 9 நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.