​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

Published : Sep 26, 2019 5:50 PM

அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

Sep 26, 2019 5:50 PM

அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் இல்லை, அது பிரேசில் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

அமேசான் காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. உலகின் நுரையீரல் எரிந்துகொண்டிருப்பதாக கூறி பன்னாட்டு தலைவர்கள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.

அமேசான் காடுகளில் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ, அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றார். அது பிரேசிலுக்கு மட்டுமே சொந்தமான பகுதி என்று அவர், அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை என்றார்.

சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது என்றார். இதனால் தான் பலரும் அர்த்தமற்ற வாதம் செய்வதாகவும், அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்பது பொய் என்றும் அவர் கூறினார்.