​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழனி முருகன் கோயில் நிர்வாகம் அளித்த பதிலால் உயர்நீதிமன்றம் அதிருப்தி

Published : Sep 26, 2019 3:16 PM

பழனி முருகன் கோயில் நிர்வாகம் அளித்த பதிலால் உயர்நீதிமன்றம் அதிருப்தி

Sep 26, 2019 3:16 PM

பழனி முருகன்கோயிலில் நவபாசான சிலைக்கு தினமும் பூஜை செய்ய கருவறைக்கு சென்றுவரும் குருக்கள் பற்றிய விபரம் இல்லை என்று கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருபடை வீடுகளில் ஒன்றான பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டு வழிபாட்டில் உள்ள நவபாசான முருகன்சிலைக்கு, நாள்தோறும் ஆறு காலபூஜை செய்யப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட் பல்வேறு விளக்கங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் இங்கு கட்டியம், கந்தபுராணம் மற்றும் தூபக்கால் போன்ற அன்றாட நடைமுறைகளில் ஈடுபடும் ஊழியர்கள் பற்றிய எந்த பதிவும் கோவிலில் இல்லை எனவும், நவபாசான மூலவர் சன்னதி அமைந்துள்ள கருவறையை தினமும் அணுகும் குருக்கள் பற்றிய விபரமும் இல்லை எனவும் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கோயில் குருக்கள் அரசால் நியமிக்கப்படவில்லை எனவும், குருக்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும், குருக்கள் வாரிசுகளை நியமித்துக்கொள்வது, பக்தர்களிடம் தட்சணை வசூல் பற்றி அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோயில் உள்ள தங்கம்,வெள்ளி ஆபரணங்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிய பதிவேடுகள் தொடர்பாக திருப்தியான பதில் அளிக்கப்பட வில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நவபாசான சிலையை திருட சதிநடைபெற்றதாக சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.