​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் - முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ சோதனை

Published : Sep 26, 2019 12:26 PM

தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் - முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ சோதனை

Sep 26, 2019 12:26 PM

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான முந்தைய அரசின் ஆட்சி காலத்தில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், பெங்களூரு காவல்துறை முன்னாள் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஏ.ஹெச். விஸ்வநாத் என்பவர், குமாரசாமி தலைமையிலான முந்தைய மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியில் எடியூரப்பா உள்பட 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு போலீஸிடம் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமாரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.