​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Published : Sep 25, 2019 5:48 PM

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Sep 25, 2019 5:48 PM

பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவி,  மிரட்டி பணம் பறிக்கும் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு ஆசிரமங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர், சின்மயானந்தா தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டாலும் 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படாமல், மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணம் பறிக்கும் நோக்கில் மாணவி பாலியல் புகார் கூறியதாக, சின்மயானந்தா தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து கைது நடவடிக்கையிலிருந்து பாதுக்காக்கக் கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க ஷாஜகான்பூர் நீதிமன்றம்  ஒப்புதல் வழங்கியது.

ஆனால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாகவே, மாணவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காலணி கூட இன்றி தமது மகளை போலீசார் இழுத்துச் சென்றதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் மாணவி, சின்மயானந்தாவிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டி மிரட்டியதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாணவியின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த ஷாஜகான்பூர் நீதிமன்றம், மாணவிக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.