​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயாவதியின் முன்னாள் செயலாளர் சொத்துக்கள் முடக்கம்

Published : Sep 24, 2019 8:38 PM

மாயாவதியின் முன்னாள் செயலாளர் சொத்துக்கள் முடக்கம்

Sep 24, 2019 8:38 PM

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் முன்னாள் செயலாளரின் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமானவரித்றையினர் முடக்கி இருக்கின்றனர்.

மாயாவதி முதலமைச்சராக இருந்த போது பல்வேறு துறைகளில் உயர் பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி நெட்ராம். ஓய்வு பெற்ற அந்த அதிகாரியின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மான்ட் பிளான்க் பேனாக்கள், 4 சொகுசு கார்கள் மற்றும் 300 கோடி பினாமி சொத்துக்களுக்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதன் தொடர்ச்சியாக டெல்லி, நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையின் பல்வேறு இடங்களில் பினாமி பெயரில் இருந்த நெட்ராமின் 19 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் குடியிருப்பு மற்றும் வர்த்தக சொத்துக்களும் அடக்கம். பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.