​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

Published : Sep 24, 2019 8:31 PM

டென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

Sep 24, 2019 8:31 PM

சென்னையில் இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச்சேர்ந்தவர் காசிம் அகமது. அவரது 21 வயது மகன் நவீத் அகமதுவுக்கும், டென்னிஸ் வீராங்கனையான இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நவீத் அகமது மீது ஒரு புகார் மனு அளித்தார். அதில் தன்னுடன் நட்பாக பழகி வந்த நவீத் அகமது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை செல்போனில் படமாக்கி வைத்துள்ளதுடன் சமூக வலைதளத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் பற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட மகளிர் போலீசார் கடந்த இரண்டு மாதங்களாக நவீத் அகமதுவை தேடிவந்தனர்.

இதனிடையே செங்குன்றம் பகுதியில் நவீத் அகமதுவை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்தி பெண்ணை மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.