​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தேப் பர்மன்

Published : Sep 24, 2019 4:01 PM



திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தேப் பர்மன்

Sep 24, 2019 4:01 PM

திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பிரத்யாட் தேப் பர்மன், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடன் இருப்பவர்கள் முதுகில் குத்திவிடுவார்களோ என்று இனிமேல், தான் கவலைப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஊழல் செய்தவர்களை கட்சியின் உயர் பதவிகளில் வைப்பது தொடர்பாக கட்சி மேலிடத்தின் உத்தரவை இனி கேட்க வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு கோஷ்டி சண்டை போடவேண்டிய அவசியமும்  இனி இருக்காது எனக்கூறி, கட்சித் தலைமையை கடுமையாக சாடியுள்ளார்.

தன்னால் இனி தெளிவான சிந்தனையுடன் தனது மாநிலத்திற்காக சேவை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.