​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூதாட்டப் புகாரில் 34 வீரர்களுக்கு சம்மன்

Published : Sep 24, 2019 3:53 PM

சூதாட்டப் புகாரில் 34 வீரர்களுக்கு சம்மன்

Sep 24, 2019 3:53 PM

கர்நாடக பிரிமியர் லீக் போட்டிகளின் போது சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான புகாரின் பேரில் பெலகாவி பேந்தர் அணியின் உரிமையாளரான அலி  அஸ்பக் தாரா ((Ali Asfak Thara, )) கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக பிரிமியர் லீகில் பெலகாவி பேந்தர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அணிகள் உள்ளன. கே.பி.எல். பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றபோது அலி அஸ்பக்  தாரா தனது அணியான பெலகாவி பேந்தர் அணி பங்கேற்கும் போட்டிகளின் போது விதிகளுக்கு மாறாக பிற அணிகளின் வீரர்களுடனும், சூதாட்டத் தரகர்களுடனும் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் சார்ந்த சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் அலி அஸ்பக் தாராவின் தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 34 வீரர்களுக்கும் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.