​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுகவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்- ராமதாஸ்

Published : Sep 23, 2019 2:26 PM

அதிமுகவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்- ராமதாஸ்

Sep 23, 2019 2:26 PM

பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாயிலில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில் பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை அளித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரச்சாரத்தை ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், காலநிலை மாற்றத்தால் புவி அதிக அளவில் வெப்பமயமாகி வருவதாகவும், அதை உடனடியாக அவசரநிலை பிரகடனம் செய்து குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை பாமக தொடர்ந்து போராடும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார். அதிமுகவுடனான கூட்டணி, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடருமா என்ற கேள்விக்கு, தொடரும் என ராமதாஸ் பதிலளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், காலநிலை அவசரநிலை பிரகடனம் வெளியிடுவது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் இதுவரை 40 சதவீத மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவதாகவும், பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை அதற்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.