​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“இங்க்குபேட்டரில்” வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்

Published : Sep 22, 2019 6:54 PM

“இங்க்குபேட்டரில்” வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்

Sep 22, 2019 6:54 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இங்க்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை எறும்புகள் கடித்ததாகக் கூறி உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

கடுவனூரைச் சேர்ந்த வாசுதேவன் - அலமேலு தம்பதியருக்கு 18ஆம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு இங்க்குபேட்டர்  கருவியில் மருத்துவர்கள் குழந்தையை வைத்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் காலை குழந்தையைப் பார்த்த அலமேலு அதன் உடல் பாகங்களில் எறும்புகள் கடித்து வீங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த நேரம் அங்கு வந்த வாசுதேவன் ஆத்திரத்தில் அங்கிருந்த கதவுகளின் கண்ணாடிகளை கைகளால் உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை சமாதானம் செய்தனர். இன்க்குபேட்டருக்குச் செல்லும் குளுக்கோஸ் குழாயில் தவறுதலாக எறும்புகள் நுழைந்துவிட்டதாகவும் குழந்தைக்கு அதனால் ஆபத்து இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.