​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை

Published : Sep 22, 2019 6:47 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை

Sep 22, 2019 6:47 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நீட் தேர்வில் சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் உதித்சூர்யா படித்து வந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் 3 மணி நேரமாக தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் எழில் அரசன், 3 பெண் மருத்துவர்கள் உள்பட கல்லூரியில் பணியாற்றும் மருத்துவ குழுவினரிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2வது நாளாக நீடிக்கும் இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.