​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டல் - குறும்பட நடிகை புகார்

Published : Sep 22, 2019 6:06 PM

பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டல் - குறும்பட நடிகை புகார்

Sep 22, 2019 6:06 PM

சென்னையைச் சேர்ந்த குறும்பட நடிகை, இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

வடபழனியைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழமையன்று காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் புழல் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக பக்ருதீனிடம் போலீசார் விசாரிக்கையில், நடிகையும் தாமும் ஒன்றாகப் பழகி வந்ததாகவும் தன்னிடம் அவர் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அதனை திருப்பிக் கேட்டதால் பொய்ப்புகார் அளித்துள்ளார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. 

புழல் காவல்நிலையத்தில் நடிகை மீது பக்ருதீன் பண மோசடி புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நடிகை அளித்த புகாரின் பேரில் வடபழனி காவல்நிலையத்தில் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.