​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு

Published : Sep 22, 2019 12:36 PM



வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு

Sep 22, 2019 12:36 PM

தேனிமாவட்டத்தில் பருவமழை பெய்துவருவதுடன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வைகை அணை மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. அணையில் நீர்மட்டம் குறைவாகவே இருந்த நிலையில், தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1003 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் வினாடிக்கு 1,339 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 56 புள்ளி 27 அடியாக உள்ளது. பாசனத்துக்காக அனையில் இருந்து வினாடிக்கு 960 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2,927 மில்லியன் அடியாக உள்ளது.