​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.63 லட்சம் கடனுக்கு வட்டியாக ரூ.1.5 கோடி வசூலித்த நபர் கைது..!

Published : Sep 22, 2019 10:57 AM



ரூ.63 லட்சம் கடனுக்கு வட்டியாக ரூ.1.5 கோடி வசூலித்த நபர் கைது..!

Sep 22, 2019 10:57 AM

மதுரையில் ரூபாய் 63 லட்சம் கடனுக்கு வட்டியாக மட்டுமே ரூபாய் ஒன்றரை கோடி செலுத்திய நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கூறி மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளரின் மனைவி உட்பட 4 பேர் கந்துவட்டி தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை நடராஜ நகரை சேர்ந்தவர் உமா முருகன். கணினி நிறுவனம் நடத்தி வரும் இவர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் பெத்தானியாபுரத்தை சேர்ந்த தவசி என்பவரிடம் 63 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், இதற்காக ஒன்றரை கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்திய நிலையில், வாங்கிய கடனை திரும்ப கேட்டு மிரட்டுவதாகவும், தனக்கு சொந்தமான இடத்தை எழுதி வாங்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தவசி அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் ராதா மற்றும் பிரேமா ஆகிய 4 பேர் மீது கந்துவட்டி தடுப்பு வழக்கில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு தவசி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ராதா மதுரை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் தினகரன் என்பவரின் மனைவி என்றும் தவசியும், ராஜேஸ்வரியும், தினகரனின் மாமனார், மாமியார் என்றும் தெரியவந்துள்ளது.